Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - மகரம்


  புத்திசாலித்தனம் வெளிப்படும் அறிவுப்பூர்வமான ஆண்டாக இருக்கும். ஏழரைசனி துவங்குகிறது என்றாலும் இதுவரை சனிபார்வையால் பட்டகஷ்டம் இனி வரும் காலம் இருக்காது என்பது நிதர்சணம். எவரோடும் இயந்திரத்தனமான மனநிலையோடு பழகாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். சத்தத்தையும் கூச்சலையும் வெறுக்கும் நீங்கள் தனிமையில் அமைதியாக இருக்க விரும்புவீர்கள். சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கிச் செல்லும் நீங்கள் குடும்பத்திற்காக எப்பேர்ப்பட்ட நபரோடும் மோதும் முதல் ஆளாக இருப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் மீது நம்பிக்கை இல்லாது உழைக்கும் பழக்கம் இருக்கும். உழைக்கத் தயாராக இருப்பதால் யாரோடும் உறவு ஒத்துப்போகும். சொந்தபந்தத்திற்குள் அனுசரனையாக நடந்து கொள்வதால் எல்லோருக்கும் பிடித்த பிள்ளையாக இருப்பீர்கள்.  தெய்வபக்தியும், சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கைகளும் எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அதேஅளவு மூடநம்பிக்கைகள் மீது வெறுப்பும் இருக்கும்.
  தொழில்-வியாபாரம் எதுவாக இருந்தாலும் பிராடெக்ட் பற்றிய முழுத்தகவலும் சந்தை நிலவரமும் அறிந்த பின்னரே களத்தில் இறங்குவீர்கள். எல்லாவற்றிலும் ரொம்ப நிதானமாக இருப்பதால் மற்றவர்கள் உங்களை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் சில நேரங்களில் எடுத்தெறிந்து பேசி விடுவதால் நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். புதிய வருமான வாய்ப்புகளால் உத்வேகம் பெறுவீர்கள். கீழ்நிலையில் தவிக்கிறவர்களின் கஷ்டங்களைக் கண்டு கலங்கும் நீங்கள் சமூக சேவை புரிவதில் ஆர்வமிக்கவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு எதிராக சதி செய்தவர்களையும் மன்னித்து அவர்களுக்கான உதவிகளையும் செய்யும் மனப்பக்குவம் இருக்கும். சில சமயங்களில் மனதில் தோன்றியதை பளிச்சென பேசி விடுவதால் பலருக்கு ஆகாதவராகவும் இருக்கும் நீங்கள் நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர். சித்தர்கள், ரிஷிகள் குறித்து சிறுசிறு குறிப்புகள் தெரிந்திருக்கும். உங்களையும் அறியாமல் ஜோதிடம், கிரகங்கள் குறித்த புத்தகங்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்திருப்பீர்கள். எழுத்தார்வமிக்கவர்களாக இருந்தாலும் பொறுமையாக அமர்ந்து எழுதுவது முடியாத காரியமாகவே இருக்கும். கம்ப்யூட்டர் அறிவு நிரம்பப்பட்டவர்களாகவும் எப்போதும் நெட் கனெக்டோடுமே இருப்பீர்கள்.
  ஆயுள்காரகனான சனிபகவானின் சொந்த வீட்டை ராசியாக கொண்ட நீங்கள் நீதிமானாக இருப்பீர்கள். அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாத நியாயவான்களாக இருப்பீர்கள். வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் நீங்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக இருப்பீர்கள். தொழிலில் ஏற்படுகிற ஏற்ற இறக்கங்களைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். சில தத்துவங்களை ஏற்றுக்கொண்டு அதன்படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வதால் இல்லறத்தில் அந்யோன்யம் பளிச்சிடும். தொட்டுவிட்டுப் போன வேலைகளில் மீண்டும் கவனத்தை திருப்புவீர்கள். கடுமையாக உழைத்து சேர்த்தவற்றை இழந்தாலும் கவலைப்படாமல் அடுத்த வேலைகளில் கம்பீரமாக ஈடுபடும் புதியதெம்பு பிறக்கும். சிலர் இதுவரை சேமித்த பொருளாதாரத்தை சரியான கணக்கு வழக்குகளுக்குள் கொண்டு வருவார்கள். அட்வான்ஸ் கொடுத்து முடிக்க முடியாமல் கிடக்கும் இடத்தை குறுகிய நாட்களுக்குள் முடிக்குமளவிற்கு பணம் கை வந்துசேரும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைகள் தாமதமாக கிடைத்தாலும் கணவன் மனைவி பாசத்திற்கு குறைவிருக்காது. தங்கநகை வியாபாரிகளும் தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களால் புதிய நம்பிக்கை பெறுவார்கள். வக்கீல்களின் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் குறையும். நடிகைகள் கடும் முயற்ச்சிக்கு பிறகே வெற்றிகளை எட்டிப்பிடிப்பார்கள். கணிப்பொறி துறையில் வேலைசெய்யும் பெண்களின் குடும்ப பிரச்னைகள் பேசித் தீர்க்குமளவிற்கு வந்துசேரும். சினிமாவில் நடிகைகள் சாதிப்பார்கள். உங்களையும் அறியாமல் சில ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள் அது நல்லதே செய்யும்.

  தொடர்புக்கு  :9965405351

  கருத்துகள் இல்லை