Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - சிம்மம்


  ஏழ்மையில் இருப்பவர்களுக்காக சிந்திக்கும் நீங்கள் பல ஏற்றங்களைச் சந்திக்கும் ஆண்டாக இருக்கும். இதுவரை உங்களை பாடாய்படுத்திய அர்த்தாஷ்டமச்சனி ஒருவழியாக இப்போது முடிந்து விட்டது. இனி உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் நம்பிக்கையோடு இருங்கள், எவ்விஷயத்தையும் நொடிப்பொழுதில் புரிந்து கொள்ளும் புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பதால் உங்களைக் கரம் பிடித்த கணவர் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். சேமிக்கத் தெரிந்த நீங்கள் கம்பெனிகளின் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் திவாலாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த கம்பெனி கூட வளர்ச்சிப் பட்டியலில் டாப்டென் –னுக்குள் இடம் பிடிக்கும். நீங்கள் திறமைசாலிகளாக மட்டுமல்லாமல் கைராசிக்காரர்களாகவும் விளங்குவீர்கள். புதிதாக திறக்கும் கடைகளில் குத்து விளக்கு ஏற்ற அனைவரும் உங்களையே அழைப்பார்கள். உங்களின் கை மணத்தில் சாப்பிட்டு பழகியவர்கள் வேறு எங்கு சாப்பிட்டாலும் வெறுக்கத்தான் செய்வார்கள். சாதுர்யமிக்க உங்களிடத்தில் எவரும் மூளை விளையாட்டில் மோதிச்ஜெயிக்க முடியாது. அனுபவங்கள் உங்களின் திறமைகளை  பட்டைதீட்டி இருக்கும். அரசியல் சாணக்கியத்தனம் நிரம்பப் பெற்று இருப்பீர்கள்.
  ராசிக்கு ஐந்தில் அமர்ந்திருக்கும் சனிபகவான் உங்களுக்கு பெரிய நன்மைகளை செய்யப்போவதில்லை என்றாலும் எந்தவித கெடுதலும் செய்யமுடியாது. சனிபகவான் உங்களுக்கு அனுபவ ஞானத்தைப் போதிக்கப் போகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அனுபவங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கை விளக்காக இருக்கும் என்பதைப் புரிந்து செயல்படுங்கள். கடன் தொந்தரவுகள் சிறுகச்சிறுக முடிவுக்கு வரும். தற்போது துலாம்ராசியில் முகாமிட்டிருக்கும் குருபகவான் உங்களின் லட்சியக் கனவுகளை நிறைவேற்றிக் கொடுக்கப் போகிறார் எனவே சோம்பலை தூக்கியெறியுங்கள். சிலருக்கு பூர்வீக இடங்களை நோக்கிய மாறுதல் இருக்கும். அதுவும் உங்களுக்கான வளர்ச்சிப் பாதைகளாகவே அமையும். நீண்டகாலமாக விலைசொல்லியும் விற்கப் போராடிக் கொண்டிருக்கும் சொத்துக்களை விரைவில் காசாக்குவீர்கள். வீட்டைக் காலி பண்ணமுடியாது என மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வாடகைதார்களை காலி செய்யமுடியாமல் கோர்ட் கேஸ் என அலைந்து திரிந்து அளுத்துப் போனவர்களுக்கு மனநிம்மதி பிறக்கும் விதமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக ஸ்தலங்கள் கட்டிட அடிக்கல் நாட்டிவிட்டு பண நெருக்கடியால் நின்றுவிட்ட வேலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் படியான சூழல்கள் அமையும். மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு பணவரவுகள் சாதகமாக இருக்கும். தாயாரின் உடல்நலனில் கொஞ்சம் அக்கறையோடு இருப்பது நல்லது. வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் திருப்தியாக திரும்பி வந்து புதுவேலைகளை லாபத்துடனே துவக்குவார்கள். வியாபாரிகள் வருமானத்திற்கான புது ரூட்டுகளைப் பிடிப்பார்கள். இன்ஜினியரிங் மாணவிகள் படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூவில் பாஸ் ஆகி வேலையில் சேருவார்கள்.
  புதுமணத்தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும். தாயாரின் மீது அன்பைப் பொழியும் உங்களுக்கு வெளிநாடு பயணங்கள் சாதகமாக இருக்கும். கடற்கரையோர ஊர்களில் வசிப்பதும் தொழில் செய்வதும் ரொம்ப சாதகமாக இருக்கும். வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக செல்லும் நீங்கள் பெரும் சம்பாத்யத்தோடு திரும்புவீர்கள். சினிமாவை நம்பி பிழைப்பு நடத்துகிறவர்கள் தங்களின் லட்சியப் பயணத்தில் வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். டெக்ஸ்டைல் மில் அதிபர்களும், துணி வியாபாரிகளும் தங்கள் வருமானத்தைப் பெருக்க புதுத்திட்டங்களுடன் மக்களைச் சந்திப்பீர்கள். வெளிநாடுகள் தொடர்பில் வருமானத்திற்கான வழிகள் தையல் கலைஞர்களுக்கு வாய்க்கும்.

  கருத்துகள் இல்லை