Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - விருச்சிகம்


  ஏழைகளுக்கு உதவிடும் உள்ளம் மேலோங்கும் கருணைமிக்க ஆண்டாக இருக்கும். ஜென்மச்சனி உங்களுக்கு முடிந்து விட்டது இனி வீணான கவலை வேண்டாம். எவ்விஷயத்தையும் ஏனோ தானோவென்று செய்யாமல் அதை ரசித்துச் செய்யும் பழக்கம் உங்களிடத்தில் இருக்கும். பகவான் பெருமாளைப் போன்று அலங்காரப் பிரியராக இருப்பீர்கள். தினம் கலர் கலராக விதவிதமாக ஆடை அணிகலன்கள் அணிவதை விரும்புவீர்கள். சிலர் வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்துவார்கள். அதேபோல வேற்று மத நண்பர்களை அதிகம் கொண்டிருப்பீர்கள். சில குடும்பங்களில் மத மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும் அல்லது தன் இனத்திற்கு மாறுபட்டு வேற்று மதத்தில் திருமணம் செய்திருப்பார்கள். கலை இலக்கியங்கள் மீது நாட்டம் கொண்டவர்களாக இருப்பதனால் எந்நேரமும் பாடல்கள் கேட்பதை விரும்பும் குணம் இருக்கும்.

  ராஜகிரகமான சூரியனை தொழில் ஸ்தானாதிபதியாக கொண்ட உங்களை அதிகாரப் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்களாக மற்றவர் கருதினாலும் நீங்கள் மனதார எளிமையையே விரும்புவீர்கள். வாய் வார்த்தைகளில் வலிமை காட்டினாலும் மனதுக்குள் குழந்தைத் தனத்தோடே இருப்பீர்கள். மற்றவர் செய்யத் தயங்குகிற வேலைகளை சுலபமாக செய்து காட்டி சாதனை நிகழ்த்துவீர்கள். எளிதில் எவ்விஷயத்தையும் கேப்சர் பண்ணுவதால் உங்களை அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் திறமைகளைக் கண்டு எளிதில் எவரும் காதல் வயப்படுவார்கள். திருமண விஷயங்களில் குடும்பத்தினர் உங்கள் முடிவுகளுக்குக் கட்டுப்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் கிரியேட்டிவிட்டியாக செய்ய வேண்டிய வேலைகள் எதுவாக இருந்தாலும் பாஸ் உங்களையே தேர்ந்தெடுப்பார். கம்ப்யூட்டர் தொடர்போடு பணியாற்றுகிற பெண்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள புத்தகம் கையுமாக இருப்பார்கள். ஆயிரம் பேர் கூடி நின்றாலும் அதிகாரம் உங்களைத் தேடியே வரும்.

  ராசிக்கு இரண்டில் அமர்ந்திருக்கும் சனிபகவான் நம்மை பாடாய் படுத்துவார்கள் என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. ஏற்கனவே ஜென்மசனியால் இதுவரை கஷ்டப்பட்ட நமக்கு இதென்ன மேலும் சோதனை என எண்ணி குழப்பிக்கொள்ள வேண்டாம். அதிலும் வாக்குச்சனி நடப்பதால் ஏதும் வில்லங்கத்தில் சிக்கிகொள்வோமோ என பயப்பட வேண்டாம். மதிநுட்பத்துடன் எவ்விஷயத்தையும் அணுகிட பழகிக் கொள்ளுங்கள். சுற்றியிருப்பவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு சிந்தித்து செயல்படுங்கள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யும் பம்மாத்து வேலைகள் சில நேரம் சறுக்கல்களையும் கொடுக்கும் வாய்ப்பிருக்கிறது. புதிய தொழில் தொடங்கும் முடிவில் இருப்பவர்கள் சேமித்த பணத்தை பத்திரமாக வைத்துகொள்வது நல்லது. நிலத்தின் மீதான முதலீடுகள் பெரும்யோகத்தைக் கொடுக்குமென பேசுபவர்களிடம் கவனமாக பழகுங்கள். வருமானத்திற்கான வழிகளை கவனமாக வகுத்துக் கொள்ளுங்கள். பரதநாட்டியம் கற்றவர்கள் பல மேன்மைகளை அடைவார்கள். சினிமா ஆர்வத்தில் இருப்பவர்களும், இசை தொடர்பாளர்களும் தங்களுக்கான உயர்ந்த வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சட்டம் படிக்கும் பிள்ளைகள் நல்ல வக்கீல்களுடன் சாதாரண பிராக்டீஸ்களை மேற்கொள்வார்கள். இளம் வழக்கறிஞர்கள் உயர் அந்தஸ்தைப் பெரும் விதமான தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். சின்னத்திரை நடிகர் நடிகைகள் பெரிய திரையில் முகம் காட்டும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். ரேட்டிங் உயர்வால் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நேயர்களிடத்தில் அதிக செல்வாக்கு பெறுவார்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உடன் பணிபுரிபவர்கள் பொறாமை கொள்வார்கள்.

  தொடர்புக்கு : 9965405351

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad