Header Ads

  • சற்று முன்

    முதிர்ந்த இல்லம்



    ஆட்டோவை அந்த பச்சை கிரில் போட்ட வீட்டின் முன்னால் நிறுத்து .........
    கைபையிலி ல் இருந்து காசை எடுத்து கொடுத்தாள் விமலா. .வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்தாள். .மகன்சஞ்சய் கார் ரிமோட் வைத்து வீளையாடி கொண்டு இருந்தான் .விமலாவை  கண்டதும் அம்மா என்று ஆசையோடு அழைத்து ஓடி வந்தான். .மழலை மொழி பிரிஜ்  மேலே இருந்த கண்ணாடி டாமல் வீழுந்திடுச்சி  தாத்தா தண்ணீர் எடுக்கும்  போது தட்டுத் தடுமாறி  பேசினான்  என்றைக்கு என் பேச்சை உன் அப்பா கேட்டாரு வயசான  கட்டைக்கு சேவை செய்யவா என் அப்பா கட்டி கொடுத்தாரு .எல்லாம் என் தலை எழுத்து என தலையில் அடித்து கொண்டு வாய் கிழிய கத்தினாள். .கடைசி அறையில் இருந்த  ஜகன்னாதன் காதில் மருமகள் பேசியது  கேட்டது என்றாலும் .இவ்வாறு திட்டுவது புதுமை அல்ல திருமண நாளிலிருந்து தந்தை மகனை பிரிக்க பல வழிகள் தேடினாள் . மகனின் ஆழமான தந்தை பாசம் வெற்றி பெற்றுக் கொண்டு வந்தது . பாவம் தன் மகன் ஜகன்னாதன் விமலாவின் ஏச்சு  பேச்சுகளை  சமாளித்து ஐந்து வருடங்கள் தள்ளிவிட்டான். இன்று என்ன கூத்து நடக்குமோ தெரியாமல் தவித்தார் . இரவு 8 மணிக்கு வேலையில் இருந்து திரும்பினான் .

    ஜகன்னாதன் .விளக்கு போடாமல் இருள் சூழ்ந்திருந்ததை  கண்டதும்  சண்டை பாம் வெடிக்க போகிறது என்பதை உணர்ந்தான் .  டைனி  ஹாலில் சாப்பாடும் எடுத்து வைக்காததால் பாலை குடித்து தந்தை அறையை எட்டிப்  பார்த்தான் .சன்னல் ஓரம் முதுகை காட்டியவாறு  படுத்திருந்தார் .நிச்சயம்  சாப்பிட்டு  இருக்க  மாட்டார் .உள்ளம் அழுதது, .எப்படி கஷ்டப்பட்டு  வளர்த்தார் 

    சொல்லிமாளாது .தான் பிறந்ததும் ஜன்னி கண்டு அம்மா இறந்ததும் ,மறுமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஐ .ஏ .எ ஸ் வரை படிக்கவைத்தார் . சமைப்பதில் தொடங்கி சட்டை துவைத்து அயன் செய்வது வரை ஒவ்வொரு வேலையைப் பார்த்து செய்வார் . காலேஜ் படிக்கும் போது தன் கடமையை தவறியது இல்லை .என் மகனுக்கு நான் செய்கிறேன் .என்ன வளர்ந்தாலும் எனக்கு நீ குழந்தை என்று தடுத்து விருப்பமுடன் செய்வார் .அப்படிபட்ட அப்பாவை தங்க தட்டில் வைத்து காலம் முழுவதும் காப்பற்ற வேண்டுமென இறைவனிடம்  வேண்டியதும் உண்டு .



    திருமண பந்தம் காதல் திருமணமாக அமைந்ததும் மகிழ்ச்சி அடைந்தான் . தந்தையை கவனிக்க தேவதை வந்தாள் என  எண்ணினான் .ஆனால் ,வந்தவளோ ,பெண்ணுருவில் வந்த கொள்ளிவாய்ப் பிசாசு ,தன் வீட்டு பெருமையை தற்பெருமையாகக் கூறினாலே தவிர  மாமனாருக்கு பணிவிடை செய்ய மறுத்தாள் .விரிசல் அதிகமானது. ஒருவருக்கொருவர் இடையே வாக்கு வாதம் வளர்ந்து இவர்கள் சண்டையைக் குழந்தை கவனிக்க தொடங்கியதைக் கண்டதும் மனைவியிடம் குதர்க்கம் பேசுவதைத் தவிர்த்தான் .விட்டு கொடுக்க பழகினான் .தந்தையும் தன்னிடம் மருமகளைப் பற்றிக் குறை என்றுமே கூறியதே இல்லை . இன்று என்ன கதை சொல்ல போறாளோ என எண்ணியவன் படுக்கை அறைக்குள் காலடி வைத்தான் ,படுத்திருந்த  விமலா விசுக்கென எழுந்து அமர்ந்தாள் .



    தன் தோழி கமலா மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறாள் . அது போல தன் மாமனாரையும் முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என பிடிவாதம் பிடித்தாள். அவரால் உனக்கு என்ன கேடு  ஏற்பட்டது .சொல்லு பற்களைக்  கடித்தான் .அவர் எப்போதும் இரவு முழுவதும் பொடி போட்டு மூக்கை  சிந்துவதும்  பிடிக்கவில்லை . என் குழந்தையும் அவரை போல செய்து காட்டுவது வெறுப்பாக இருக்கிறது மேலும் வியாதிகள் நம் குழந்தைக்கு வந்தால் என்ன செய்வது அதனால் அவரை ஹோமில் சேர்க்க அட்மிஷன் பாம்வாங்கி வந்து விட்டதாகக் கூறினாள் அதைக் கேட்டதும் கொதித்தெழுந்தான் . ஆத்திரம் அடங்காமல் மனைவி கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். ச்சீ...  பெண்ணுருவில் வந்த பிசாசே என் நிம்மதி போய் விட்டதே என கத்தினான் .மகனின் உள்ளக் கொதிப்பை அறிந்த அப்பா மருமகள் கொண்டு வந்த பாம் பூர்த்தி  செய்து அந்த ஹோமில் சென்றடைந்தார் .இனி மேல் குடும்பத்தில் தகராறு .இல்லாமல் தகராறு இல்லாமல் இருப்பார்கள் என எண்ணி அவ்வாழ்கைக்கு தன்னை மாற்றிக் கொண்டாள் .

    தன் மனைவி வீட்டார் அனைவரும் வருவதும் போவதும் அதிகமாயிற்று . ராமேஷ்கு மட்டும் தந்தை இல்லாத வீடு நரகமாக காட்சி அளித்தது . தந்தை அறையில் தங்கி இருப்பதை அதிகமாக்கிக் கொண்டாள். கணவரின்  போக்கு விசித்திரமாகத் தோன்றத் தொடங்கியது .இரவு கால தாமதமாக வருவது, தீய பழக்கங்களைக் கற்றுக்  கொள்ளத் தொடங்கினான் .



    மாமனார் வாயில்லாத பூச்சியாக இருந்தாலும் அவர் வீட்டிலிருபத்தை வெறுத்து வெளியே அனுப்பிய பின்பு கணவரின் செய்ல்களில் துன்பம் தரத் தொடங்கினான் . கணவன் செய்யும் தவற்றைச் சுட்டி கட்டினால் கையை ஓங்கி அறைந்து விடுகிறான். ஒன்றும் தோன்றாமல் திகைத்தாள். யானைக்கு மதம் பிடித்தால் தன் தலையில் தானே மண்னை வாரி கொட்டுவதை எண்ணி வருந்தினாள். நாட்கள் நகர்ந்து ஒரு நாள் மாலை நேரத்தில் வேலையிலிருந்து சோர்வுடன் வீடு திரும்பினாள் ரமேஷ் .

    குழந்தை பள்ளியிலிருந்து வந்தவன் அதிசயமாக தந்தை வீட்டிலிருந்து பார்த்ததும் மகிழ்ச்சியில் பொங்கி அப்பாவின் கழுத்தை இருகரத்தால் கட்டிக் கொண்டு உற்சாகத்துடன் ஊஞ்சல் ஆடினன்.  மகனின் செய்கை பழைய நினைவை நினைவு படுத்த அவனைத் தூக்கி கொஞ்சினான் . தனனையே நொந்து உருகினான் .திரும்பியவன் குழந்தையை தூக்கி கொஞ்சினான். டேய் உன்னைப்போல நானும் என் அப்பாவிடம் பாசமாக இருந்தேன். அன்பாக என்னை வளர்த்தார்  வளர்ந்து ஆலமரமாக நிழல் தரும் நேரத்தில் வேரை வெட்டி அறுத்தெறிந்து விட்டேன்  பாவம் ....ஹோமில் சென்றும் பார்க்க வில்லையாட  என் செல்லமே  நீ வளர்ந்து என்னடா செய்வே மகனே . 

    அப்பா நான் பெரியவனா வளர்ந்து அம்மாவை தாத்தா ஹோமில் சேர்த்திடுவேன் .நீ நான் தாத்தா மட்டும் இந்த வீட்டில் இருக்கலாம் .அழாதேப்பா என்று கண்களில் ஓடிய நீரை விரலால் துடைத்தான் .வாசலில் வந்திருந்த விமலா தன் கணவனுடன்  மகன் .பேசியதைகேட்டதும் . கன்னத்தில் அறைந்தது போன்று நெஞ்சில் வலி ஏற்பட்டது.



    முதிர்ச்சி அடையாத தன் மகன் பேச்சைக் கேட்ட தனக்கே மனம்தாங்கவில்லை என்றால் இத்தனை நாள் தன் கொடியசெய்கையால் மாமனார் எவ்வளவு  மனவேதனை அடைந்திருப்பார் .முதிர்ந்த பெரியவர் துணை எத்துணைத் தேவை என்பதை உணர்ந்தாள் .தன் கணவன் குழந்தையுடன் ஹோமிற்குச்  சென்றாள் .மாமனாரை தம் இல்லத்திற்கு அழைத்து வருவதற்காக .வசந்தகால மலர்கள் மலர தொடங்கியன .........


    .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad