Header Ads

  • சற்று முன்

    கன்னியாகுமரியே நீரில் தத்தளிக்கும் வேளையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேவையா?... ஸ்டாலின் கேள்வி




    சென்னை: கன்னியாகுமரி மாவட்டமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது மிகவும் முக்கியமா? என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கன்னியாகுமரியில் பாதிப்பு 


    ஓகி புயல் கன்னியாகுமரியில் கோரத் தாண்டவம் ஆடியது. இதனால் தென் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சேதம் அதிகமாக உள்ளது.

    மீனவர்கள் கதி என்ன? 




    இந்நிலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

    விஷால் போட்டியிடலாம் 


    இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தற்போது ஆட்சி மாற்றத்துக்காக இணைந்துள்ள கூட்டணி ஆர்.கே.நகர் தேர்தலில் மட்டுமே. வாக்குரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்கிறபோது விஷால் போட்டியிடலாம்



    அரசு விழா 


    ஓகி புயலால் ஒரு மாவட்டமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆடம்பர வளைவுகள், கட் அவுட்கள் வைத்து மக்கள் வரிப்பணத்தில் அரசு விழா எடுத்துக் கொண்டுள்ளார்கள். அவற்றை ரத்து செய்துவிட்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad