Header Ads

  • சற்று முன்

    ஜெயலலிதா முதலாண்டு நினைவுதினம்... மெரீனாவில் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி


    சென்னை: ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்திய அரசியலில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்த பெண் முதல்வர் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர், ஜெயலலிதா.

    எம்ஜிஆர் உருவாக்கிக் கொடுத்த அதிமுகவை 30 ஆண்டு காலம் ராணுவ கட்டுப்பாட்டோடு அவர் வழிநடத்தினார். 6 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா, தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் கோலோச்சியவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும், சிகிச்சை பலனளிக்காமல், கடந்த ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களை மீளாத்துயரில் ஆழ்த்திய ஜெயலலிதாவின் மறைவு, தமிழக அரசியலையும் ஆட்டம் காணச் செய்தது. ஜெயலலிதா மரணமடைந்த ஓராண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர். அதிகாலை முதல் வரிசையாக நின்று தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றன. சென்னை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திரண்டு வருமாறு அதிமுகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9 மணிக்கு அரசு சார்பில் பேரணி நடைபெற உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad