Header Ads

 • சற்று முன்

  உறவே இல்லைன்னு ஆயிடும், ஜாக்கிரதை... விவேக்கை எச்சரிக்கை செய்த தினகரன்

  சென்னை: இளவரசி மகன் விவேக், சசிகலா அக்கா மகன் தினகரன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ஒருகட்டமாக உறவே இல்லை என்றாகிவிடும் என விவேக்கை தினகரன் எச்சரிக்கையும் செய்திருக்கிறாராம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் டி.டி.வி.தினகரனுக்குக் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. விவேக்குடன் நடந்த காரசார மோதல்தான் இதற்குக் காரணம். இதன் காரணமாக, ஜெயா டி.வி நிர்வாகத்திலும் விவேக் தரப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் மன்னார்குடி சொந்தங்கள். இரட்டை இலையை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் தினகரன். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடியுள்ளன.  தொண்டர்களை நம்பி 

  இலையை வீழ்த்திவிட்டால் அ.தி.மு.கவின் அடிப்படைத் தொண்டர்கள் தன்னுடைய தலைமை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறார் தினகரன். ஆனால், அவருடைய முயற்சிக்குக் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு இல்லை.

  ஆதரவாளர்கள்தான் பலம்   இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்ட தனது ஆதரவாளர்களையே பெரிதும் நம்பியிருக்கிறார் தினகரன். இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமனின் சமீபகால செயல்பாடுகளை தினகரன் விரும்பவில்லை. குடும்பத்தினர் அனைவரும் தனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என சந்தேகிக்கிறார் தினகரன்.

  விவேக்கு எதிர்ப்பு   ஜெயா டி.வியில் துரைமுருகன் பேட்டி வந்த அன்று கடும் கோபத்தில் இருந்தார் தினகரன். யாரைக் கேட்டு அவருடைய பேட்டியை ஒளிபரப்பு செய்தீர்கள். சட்டமன்றத்திலேயே ஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்தவர் அவர். அப்படிட்டவரின் பேட்டியை ஒளிபரப்பினால் தொண்டர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எனத் திட்ட, எதிர்முனையில் விவேக்கும் சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்கள். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தினகரன், இனி நமக்குள் உறவே இல்லாமல் போய்விடும். அவ்வளவுதான் சொல்ல முடியும் எனக் கடுகடுத்திருக்கிறார். 

  பேசிக் கொள்ளாத சொந்தங்கள் 
  இதன்பிறகு, விவேக்கும் தினகரனும் சரியாகப் பேசிக் கொள்வதில்லை. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து, தினகரன் வசைபாடியதைக் கூறியிருக்கிறார் விவேக். ஆர்.கே.நகர் தேர்தல் முடியட்டும் என சமாதானப்படுத்தியிருக்கிறார் சசிகலா. ஜெயா டி.வி ரெய்டின்போதும், விவேக்கை முன்னிறுத்தியே சிலர் கோஷம் எழுப்பியதை தினகரன் விரும்பவில்லை

  விவேக் மறுப்பு 

  இந்த மோதலை அடுத்து, ஆர்.கே.நகர் பிரசாரக் களத்துக்குள் நான் வர மாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டார் விவேக். கடந்தமுறை விவேக்கின் முறைமுகப் தேர்தல் பணியால், தினகரனின் வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டது. இந்தமுறை அதற்கான வாய்ப்பு இல்லை. இதனை தினகரனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார். விவேக் தரப்பினரை சமாதானப்படுத்த தினகரன் தரப்பில் உள்ள சிலர் முயன்று வருகிறார்கள். சசிகலா சிறையில் இருப்பதால், அரசியல் தொடர்பான விவகாரங்களை அவர்தான் கையாண்டு வருகிறார். அவர் சொல்வதையும் கேட்டுச் செயல்படுவது நல்லது எனக் கூற, இதற்குப் பதில் அளித்த விவேக், இன்று வரையில் ஆளும்கட்சிக்கு எதிராகத்தான் ஜெயா டி.வியில் செய்திகள் வருகின்றன. தினகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்திகளை வெளியிடுகிறோம். அவரைப் புறக்கணிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமில்லை' எனக் கூறியிருக்கிறார். இருப்பினும், குடும்ப உறவுகளுக்கு ஏற்பட்ட மோதலை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் திணறி வருகிறோம் என்கிறார் மன்னார்குடி சொந்தக்காரர் ஒருவர்.


  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad