Header Ads

  • சற்று முன்

    விஷாலின் கனவு வேட்பு மனுவோடு தடைபட்டுள்ளது


    சென்னை : வேட்பு மனுவில் 2 போலி கையெழுத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை பாய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக களமிறங்கிய நடிகர் விஷாலின் கனவு வேட்பு மனுவோடு தடைபட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட நேற்று பைக்கில் பேரணியாக வந்த நடிகர் விஷால் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கி மனு தாக்கல் செய்து விட்டு சென்றார்.
    இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காத்திருந்தார். அவருடை மனுவில் சில சந்தேகங்கள் எழுந்ததால் அதன் மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற வேட்புமனுக்கள் முடிந்து மீண்டும மாலை 5 மணியளவில் விஷாலின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது விஷாலின் வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்களில் 2 பேரின் கையெழுத்து போலி என்பது கண்டறியப்பட்டது. முன்மொழிந்த 2 பேரே நேரில் வந்து தேர்தல் அதிகாரியிடம் இது தங்களின் கையெழுத்து அல்ல என்று சொன்னதையடுத்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஷால் தன்னுடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை மறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றும் நோக்கில் போலி கையெழுத்துகளை போட்டுள்ளதால், நடிகர் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாயலாம் என்று சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad