Header Ads

  • சற்று முன்

    10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்ககள் மீட்ககோரி ஈரோடு எஸ்.பி .யிடம் புகார் மனு .

    கடந்த பத்து ஆண்டுகளாக வளர்மதி - சசிகுமார்  என்ற காதல் ஜோடியை செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் தன்னுடைய கஸ்டடியில் வைத்துக் கொண்டு செங்கல் அறுக்க வைத்து மிக சொற்பனான கூலியை கொடுத்து பட்டினி போட்டதோடு வேறு எங்காவது வேலைக்குச்  சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார். அவர்களை செல்லியப்பன் என்ற வழக்கறிஞர்  மீட்டு ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்திருக்கிறார்.



    இதுப்பற்றி வழக்கறிஞர் செல்லியப்பன், ''தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. ஈரோடு சத்தியமங்கலம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இருவரும் படிப்பறிவு இல்லாத ஏழைகள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு வந்ததை அடுத்து செய்வதறியாது திகைத்து இருந்திருக்கிறார்கள். இருவருக்கும் செங்கல் அறுக்க தெரியும் என்பதால் அரசூர் நாயக்கர்புதூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் என் சூளையில் தினமும் செங்கல் அறுத்தால் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் தருவதாக கூறி அழைத்துச் சென்று காட்டுக்குள்ளேயே ஒரு குடிசையைப் போட்டு கொடுத்து விடுகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து தினந்தோறும் 1000 செங்கல் அறுத்திருக்கிறார்கள். ஆனால் வெறும் 350 மட்டுமே கொடுத்திருக்கிறார்.அந்த வருமானம் சாப்பாட்டு செலவுக்கு சரியாக இருந்திருக்கிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு வருமான போதுமானதாக இல்லை. வெளிச் சூளையில் 1000 செங்கல் அறுத்தால் 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். என்பதால் எங்களுக்கு வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் வெளிச் சூளைக்கு வேலைக்கு போவதாக கூறி இருக்கிறார்கள். அதையடுத்து அந்த சூளை உரிமையாளர் தேவராஜ் என்னிடம் வேலைப் பார்க்காமல் வேறு எங்காவது வேலைக்குச் சென்றால் இருவரையும் கொலை செய்து விடுவேன். உங்க பிள்ளைகள் படிக்க கூடாது என மிரட்டியதாகவும். அதனால் பயந்துகொண்டு இருந்தோம். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடி வந்துவிட்டார்கள். அவர்களை என் நண்பர் எலத்தூர் சுப்பிரமணியன் பார்த்து அடைக்கலம் கொடுத்ததோடு என்னிடம் விஷயத்தைச் சொன்னதை அடுத்து ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad