Header Ads

  • சற்று முன்

    எகுரும் பிரஷர் குக்கர் தினகரன் ! அதிரும் அதிமுக மற்றும் திமுக !

    ஆர் .கே .நகரில் தொபியோடு கடந்த முறை வெளிவந்த தினகரன் தற்போது பிரஷர் குக்கர் சின்னத்துடன் ஆ.கே.நகரை வலம் வருகிறார்.
    ஆர்.கே நகருக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 கட்சியினர் போட்டியிட்டாலும் சுயேட்சைகள் சேர்த்து மொத்தம் 49 பேர் களத்தில் இருக்கின்றனர்.



    எதிரிகளுக்கு சவால் விடும் தினகரன்
    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை வைத்து எனக்கு வெற்றி பெற தெரியும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் ப்ரஷர் கொடுக்கும் சின்னர் குக்கர் என்று கூலாக பதில் சொன்னார் தினகரன். சொன்னது போலவே களத்தில் இறங்கி கலக்கி வருகிறார்.

    வெற்றிவேலின் குக்கர் 

    ஒரு பக்கம் தங்கத்தமிழ் செல்வன் எம்எல்ஏ குக்கரை பிடிக்க, இன்னொரு பக்கம் வெற்றிவேல் எம்எல்ஏ குக்கரை உயர்த்தி காட்ட உற்சாகமாக பிரச்சாரம் செய்கிறார் டிடிவி தினகரன். இல்லத்தரசிகளின் சமயலுக்கு குக்கர் எத்தனை அவசியம் என்று சொல்லி சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். என்ன தொப்பியை விட குக்கர் செலவு கொஞ்சம் அதிகம்தான்.



    தொப்பியை நாடும் ஆளுங்கட்சியினர்


    தொப்பி சின்னத்தை தொகுதி பக்கம் எட்டிப்பார்க்க விடக்கூடாது என்று தினகரன் தரப்பு மல்லுக்கட்ட, ஆனால் தொகுதி முழுக்க தொப்பியை காட்டி குக்கருக்கு விழும் ஓட்டை பிரிக்கணும் என்று ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளது. எப்படியோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சுயேட்சைகள் என பலரது பிரசரையும் அதிகரித்துள்ளது


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad