கொட்டும் மழையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றகுடி மலை மீது அருள் புரியும் சண்முகநாதர் ஆலயத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது .
கடந்த 24ம் தேதி கொடியேற்றத்ததுடன் கார்த்திகை திருவிழா தொடங்கியது.
தினந்தோறும் சண்முகநாதர் வள்ளி தெய்வானையுடன்
பல்வேறு வானங்களில் அவதரித்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பலித்தார் இதில் தவ திரு குன்றகுடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி பரணி தீபத்தை ஏற்றி கொட்டும் மழையில் சொக்கபனை ஏற்றினார்
காரைக்குடி திருப்பத்தூர் சிவகங்கை தேவகோட்டை ஆகிய பகுதிகளில்
உள்ள நகரம் மற்றும் கிராம பகுதி மக்கள் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மலையின் மீது தீபம் ஏற்றும் பொழுது அரோகரா கோசம் எழுப்பி வழிப்பட்டனர்.
தாமாரை கொப்பரையில் நெய் 30 கிலோ கற்பூரம் இரண்டு கிலோ 10 மீட்டர் காடா துணி கொண்டு தீபம் ஏற்றப்பட்டதது .
கருத்துகள் இல்லை