• சற்று முன்

    டிடி. வி.தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார் .



    முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்று 24ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு சுயேட்சி வேட்பாளாரான டிடி.வி.தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .

    ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக இன்று (28.12.17) தலைமைசெயலகத்தில் சட்டமன்ற சபாநாயகர் தனபால் டிடி.வி.தினகரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    இவர் 1999 ஆம் ஆண்டு பெரிய குளம் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுபினராக இருந்தார். 2004 நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார் .பின் 2004ல் ராஜ்யசபாவில் உறுப்பினராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

    வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் , செந்தில் பாலாஜி ,பழனியப்பன்,உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர் .
    பின்னர் செய்தியளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. டிடி.வி.தினகரன் கட்சியின் சின்னமும், பெயரும் மட்டும் இருந்தால் போதாது . மக்கள், தொண்டர்கள் இருக்க வேண்டும் . ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் என்ன செய்வேன் என்று சொன்னார்களோ அவை அனைத்தும் சின்னம்மா தலைமையில் செய்வேன் என்று கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad