Header Ads

  • சற்று முன்

    முன்ஜாமீன் கோரும் - வெற்றி வேல்


    தலைமைச் செயலகத்தில் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது எடுத்ததாகக் கூறி, 20 நொடி வீடியோவை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரி புகாரின்பேரில், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசாணையை மீறியதாக இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் கீழும், தேர்தல் விதிகளை மீறியதாக சட்டப்பிரிவு 126(i)b-யின் படியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில், முன்ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேர்தல் நோக்கத்திற்காக தாம் வீடியோவை வெளியிடவில்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலேயே தாம் வீடியோவை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாம் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தமது செயல் தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் வராது என்றும், முன்ஜாமீன் மனுவில் வெற்றிவேல் கூறியுள்ளார். தமக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் தாம் கட்டுப்பட தயார் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad