Header Ads

  • சற்று முன்

    பத்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் திருவண்ணாமலை தீப விழா நிறைவுற்றது


    ஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக இருக்கும் திருவண்ணாமலைக்குச் சிறப்புச் சேர்ப்பது திருக்கார்த்திகை தீபத்திருவிழாதான். சைவர்களின் முக்கியத் திருவிழாவான தீபத் திருவிழா சென்ற நவம்பர் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதையடுத்து நவம்பர் மாதம் 28-ம் தேதி இரவு வெள்ளித்தேர் உலாவும், அடுத்த நாள் 29-ம் தேதி தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றன. பதினேழு நாள் உற்சவத்தின் சிறப்பான விழாவான திருக்கார்த்திகை தீபவிழா டிசம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் மலைமீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    தகதகத்து எழுந்த அந்த மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள் எழுப்பிய 'அரோகரா' கோஷம் விண்ணை முட்டியது. தீபம் எழுந்த கணத்தில் வானமே வாணவேடிக்கைகளால் அழகு பெற்றது.
    தெருவெங்கும் தீபவரிசைகளும், பாமாலை பஜனைகளும் நிரம்பியிருந்தன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு யாத்ரீகர்களும் திருவண்ணாமலைக்கு வந்து இந்தத் தீபவிழாவினைக் கண்டு ரசித்தார்கள்.

    2,09,85,443 ரூபாய் பணமாக காணிக்கை வந்தது என்றும், கடந்த ஆண்டைவிட இது சுமார் 35 லட்ச ரூபாய் அதிகம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் இந்த ஆண்டு 409 கிராம் தங்கம், 1,275 கிராம் வெள்ளி போன்றவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த ஆண்டு 375 கிராம் தங்கம், 1,170 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்திருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மோட்சம் அளிக்கும் இந்தத் தீபத் திருவிழா, பல சவால்களுக்கு இடையிலும் சீரும் சிறப்புமாக நடைபெற உறுதுணையாக இருந்த பல்வேறு அமைப்புகளுக்கு ஆலயத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்து நன்றி கூறப்பட்டது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad