மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி நாகையில் பெண்கள் கடலில் இறங்கி போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி நாகை மாவட்டம் நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் மீனவர்கள் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி பெண்கள் திடீரென கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை