Header Ads

  • சற்று முன்

    பாஜகவின் வெற்றி குட்டு வெளிப்பட்டது !!


    லக்னோ: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு மூலமாக வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் பாரதிய ஜனதா கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலமான வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் மட்டும் பாஜக அமோகமான வெற்றியை பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாஜகவினர் முறைகேடாக பயன்படுத்தி தேர்தலில் வென்று வருகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றவர்கள் பழைய வாக்குச் சீட்டு முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.




    ஆனால் மின்னணு வாக்குப் பதிவுதான் வேண்டும் என ஒற்றைக்காலில் பாஜக அடம்பிடித்து வருகிறது. பாஜகவின் இந்த அடம் பிடித்தல் குறித்து தொடர்ந்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது. தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெறுவதை உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு மூலம் நடைபெற்ற இடங்களில் பாஜக 87% வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களிலோ பாஜக படுதோல்வியையும் பெரும்பாலான இடங்களில் சுயேட்சைகளும் வென்றிருக்கின்றனர். இத்தனைக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட வாக்குச் சீட்டு மூலம் கணிசமான இடங்களைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad