Header Ads

  • சற்று முன்

    கன்னியாகுமரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 72 கிலோ கஞ்சா பிடிபட்டது



    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கன்னியாகுமரி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி முரளிதரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையில் தனிப்படையினர் ஆரல்வாய் மொழி அருகில் உள்ள முப்பந்தலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸார் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் சென்றதால், உடனே போலீஸார் அந்தக் காரை ஜீப்பில் துரத்திச் சென்று மடக்கினார்கள்.
    காரைச் சோதனைச் செய்ததில் அதில் 36 பொட்டலங்கள் இருந்துள்ளன .அதில் ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனைக் கைப்பற்றிய போலீஸார் இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்தபோது உத்தமபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் கம்பத்தைச் சேர்ந்த பவுன் துரை என்று தெரிய வந்தது.
    இந்த இரண்டு பேரும் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது. போலீஸார் பிடித்த கஞ்சாவின் மதிப்பு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்..கஞ்சாவை கடத்திய இருவரையும் விசாரணைக்கு பின் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad