Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் வட்டார சிறிய உணவுப்பொருள்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் 6ம் ஆண்டு விழா



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வட்டார சிறிய உணவுப்பொருள்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் 6ம் ஆண்டு விழா பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆர்.கே.நகர் இடைதேர்தல் காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் யார் கொண்டு செல்கின்றார்கள், எங்கு போகிறது என்று அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் சோதனை என்ற பெயரில் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தினை பிடிக்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டிற்கு பணம் வாங்க வேண்டாம் என்பதனை எங்கள் அமைப்பு வலியுறுத்துகிறது. புணம் விளையாடிக் கொண்டு இருக்கிறது. இந்த இடைத்தேர்தலை தள்ளி வைத்து, மீண்டும் தேர்தல் நடத்த  வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக இருப்பதை அறிய முடிகிறது- ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது. உள்நாட்டு குளிர்பானங்கள் உற்பத்திக்கு மத்திய,மாநில அரசுகள் சலுகைகள் அளித்து ஊக்குவித்தால் வெளிநாட்டு குளிர்பானங்கள் இங்கு முழுவதுமாக தடைசெய்யப்பட வாய்ப்பு உள்ளது அரிசி,பேக்கரி, அலுமினிய பாத்திரம் உள்ளிட்ட அன்றாட வீட்டு உபயோகப்பொருள்களுக்கு ஜீ.எஸ்.டி வாரி குறைக்க வேண்டும், 28சதவீதம் என்பதனை குறைக்க வேண்டும் என்றார். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் சட்டம் குறித்து வணிகர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும் லைசன்ஸ் பெற மேலும் 6மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும், அபராதம், சிறை என்று அதிகாரிகள் மிரட்டுவதை கைவிட வேண்டும், கடை, வீடுகளுக்கு வரி மறுசீரமைப்பு செய்ய அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது, நியமான முறையில் வரி விதிப்பு செய்ய வேண்டும் என்றார்.



    ஆர்.கே.நகர் இடைதேர்தல் காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் வணிகர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை வழங்கப்படும் நிலை உள்ளது. ஆர்.நகர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக இருப்பதை அறிய முடிகிறது என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad