Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம்


  நஷ்டங்கள் லாபமாக மாறும் அதிர்ஷ்ட ஆண்டாக இருக்கும். செய்யும் காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ரொம்ப சென்ஸ்சிடிவ்வாக இருப்பீர்கள். பொறுப்பில்லாமல் பேசுபவர்களைக் கண்டு முகத்தில் கோபம் கொப்பளிக்கும். பழகியவர்களோடு பாசமாக இருப்பதால் சிறிய விஷயங்களுக்கெல்லாம் கண் கலங்கும் பழக்கம் இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் கிடைத்துக் குதூகலமடைவீர்கள். குறை குடம் குத்தாட்டம் போடும் ஆனால் நீங்கள், ராசிக்கேற்றாற் போல நிறை குடமாக இருப்பதால் எவரிடமும் பணிவுடன் பேசிப் பழகும் பழக்கம் இருக்கும். எதிரில் தயங்கி நிற்பவரின் நிலையறிந்து உதவி என்று கேட்பதற்கு முன்னதாக வாரி வழங்கும் நவீன பாரி வள்ளலாக இருப்பீர்கள். ஊருக்கு நல்ல பிள்ளையாக இருக்கும் நீங்கள் குடும்பத்திற்குள் வல்லமைமிக்க செல்லப் பிள்ளையாக வலம் வருவீர்கள். 
  அட்டமத்துச்சனி காலகட்டமாக இருப்பதால் கணவருக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவர் மீதும் பொஷசிவ் அதிகமாக இருக்குமென்பதால் மாமியார் மறுமகள் சண்டைக்கு அளவே இருக்காது. குடும்பத்தின் சலசலப்புகளை குறைத்துக் கொள்ள தனிக்குடித்தனம் செல்வது நல்லது. ஆனால் மனஉறுதியைக் கொடுக்கும் சனிபகவானை தர்மகர்மாதிபதியாக கொண்ட உங்கள் திறமைகளை எவரும் எளிதில் புரிந்து கொள்ளவே முடியாது. தினம் புதியபுதிய வார்த்தைகளைக் கொண்டு பேசி விளையாடுவீர்கள். இதெல்லாம் எங்கம்மா படிச்ச என்று தகப்பனார் கேட்குமளவிற்கு ஆச்சரியப்படுத்தி விடுவீர்கள். தலைக்கணமற்று எளிமையையும் தன்னடக்கத்தையும் எப்போதும் உடன் வைத்திருப்பீர்கள். உங்களை நண்பர்கள் பட்டை தீட்டிய தங்க ஆபரணமாக்க போகிறார்கள். பளபள பொருட்கள் எல்லாமே படாதபாடு பட்டுத்தான் அந்த நிலையை அடைந்திருக்கின்றன. அதேபோல வாழ்க்கையில் பெருவெற்றியை பெற்றவர்கள் அனைவருமே பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தவர்கள்தான். 

  ஆறாமிடத்தில் குருபகவான் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வந்துவிடாது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் உறுதியோடு செயல்படுங்கள். எந்த வேலைகளையும் ஆர்வத்தோடு செய்வதால் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தனியார் கம்பெனிகளில் வேலைசெய்வோர் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கிற போது பிரமோஷன்களால் சந்தோஷம் கொள்வீர்கள். மாணவச்செல்வங்கள் கல்வியில் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள். காதலர்கள் இடைவெளி விட்டு பேசிக்கொண்டால் டென்சனை தவிர்த்துக் கொள்ளமுடியும். திருமண தாமதங்களால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் தெய்வ வழிபாடுகள் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ள முடியும். வெளியிலிருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பது சிரமமாக இருக்கும். ‘தெரிந்த வேலைகளைச் செய்யாதவரும் கெட்டார், தெரியாத வேலைகளைச் செய்தவரும் கெட்டார்..!’ –என நம் முன்னோர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறான அனுபவங்கள் நம்மை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது உகந்தது. அதைவிட்டு நண்பர்கள் சொன்னார்கள் என்று நம்பி எதிலும் கால் வைத்து வழுக்கி விழாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. இதுவரை சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்திருப்பவர்கள் நல்ல இடங்களைப் பார்த்து வாங்கிப் போடுவது எதிர்காலத்தில் உதவிகரமாக அமையும். அநாவசியமான செலவுகளை அரசு ஊழியர்கள் குறைத்துக் கொள்வார்கள். சினிமாத்துறையினருக்கு ரெகுலரான வேலைகள் நடக்கும். முதல் பட வாய்ப்பமையும் இயக்குனருக்கு இக்காலம் அனுபவ படமாக அமையவே வாய்ப்பிருக்கிறது. இளம்பருவத்தில் இருப்பவர்களுக்கு காதல் வெங்காயம் மாதிரி இருக்குமென்பதால் டைம் வேஸ்ட். குழந்தை பெற தாய்வீட்டுக்கு வந்துள்ள பெண்கள் கணவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
  தொடர்புக்கு : 9965405351

  கருத்துகள் இல்லை