Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - மீனம்


  இன்னல்கள் விலகும் இனியஆண்டாக இருக்கும். கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற உங்களை வெற்றிகள் தேடி வந்து தழுவும். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் -என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் நீங்கள், சகோதர சகோதரிகள் மீது பாசமாக இருப்பீர்கள். குடும்பப் பாரங்கள் அனைத்தையும் சுமக்கும் சுமை தாங்கியாக இருந்து குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும் பெண் தளபதியாக மாறுவீர்கள். அனைவருக்கும் ஆதரவளிக்கும் ஆபத்பாந்தவனான குருபகவானின் அருள்கடாட்சம் பெற்ற நீங்கள் சமூகத்தில் மதிப்பு குறையாத வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். கீழ்நிலையிலிருந்து கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களாக இருப்பதால் அனைத்தும் அத்துபடியாக இருக்கும். தன்னைவிட வயதில் மூத்தோர்களுக்கு கூட ஆலோசனைகளை வாரி வழங்கும் அளவுக்கு அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள். அவமானங்களை வாழ்க்கை உயர்வுக்கான படிக்கட்டுகளாக அமைத்துக் கொள்வீர்கள். தோல்விகளைக் கொண்டு துவண்டு போகாமல் அடுத்தடுத்த முயற்சிகளில் பாடம் கற்றுக் கொண்ட நீங்கள் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்துப் பழகி விட்டீர்கள்.
  தொழிலில் அனுபவம் ஏதுமில்லாதவர்கள் உங்களிடம் ஆலோசனை பெற்று செயல்பட்டால் கட்டாயம் வெற்றி பெறுவார்கள். உங்களைப் பற்றி சிந்திப்பதை விட அடுத்தவர்களுக்காக சிந்திப்பதே அதிகமாக இருகும். தன்மானம் மிக்கவர்களாகவும் மரியாதையான பேச்சுக்களை எதிர்பார்ப்பதாலும் உங்களிடம் பழக பலர் தயங்குவார்கள். விசுவாசமாக இருப்பவர்களின் தேவைகள் அறிந்து மனமுவந்து உதவுவதில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம். வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். இதுவரை இழந்தது பல லட்சமாக இருந்தாலும் இனி நீங்கள் சம்பாதிக்கப் போவது பல கோடிகளாக இருக்கும். அந்தஅளவிற்கு நல்லதாகவே நடக்கும். அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் குரு என்பார்கள் அப்பழமொழியைக் கண்டு பயப்படாதீர்கள். குருபகவான் பார்வை ஸ்தானங்களுக்கு நன்மைகளை செய்வார் என்பதால் உங்கள் சுகத்திற்கு ஒருபோதும் குறை வராது. சிலருக்கு இளைய சகோதர வழியில் தேவையற்ற வில்லங்கங்கள் ஏற்படும் என்பதால் சொத்து விவகாரங்களில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கோவில் கட்டுமான பணிகளில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்திடுங்கள். வாகன தொடர்புடன் தொழில்புரிபவர்களுக்கு பணவரத்துகள் நன்றாக இருக்கும். குழந்தை வேண்டி காத்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் தொட்டில் கட்ட வேண்டிவரும்.

  சொந்தமாக வீடு கட்டும் முயற்சியில் இருக்கும் நீங்கள் பொருளாதாரத்தில் வலிமை பெறுவீர்கள். துவங்கிய வேகத்தில் நின்று கிடப்பில் கிடக்கும் வேலைகள் படபடவென முடிந்து புன்னகை புரியும்.  வங்கியில் தொழில் தொடங்க கடன் கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு சாதகமான தகவல்கள் வந்து சேரும். பூர்வீக ஊர் சொத்துக்களில் இருக்கும் வில்லங்கமான நபர்களை பேசிச் சமாளித்து பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சொந்த கிராமங்களை விட்டு தொழில் நிமித்தமாக நகரங்களில் குடியேறியிருப்பவர்கள் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக வருமானம் இருக்கும். காவல்துறை மற்றும் இராணுவத்தில் பணிபுரிபவர்களின் பிரச்னைகள் முடிந்து குடும்பத்தில் சந்தோஷம் களைகட்டும். ஓய்வு பெற்று முதியோர் இல்லங்களில் தனிமைகளை சுமந்து வாடும் பெரியோர்கள் சந்தோஷம் கொள்ளும் விதமான சம்பவங்கள் நடக்கும். வெள்ளிக்கிழமை செய்யும் காரியங்கள் சாதகமாக இருப்பது போன்று தோன்றும். பேருந்து நிலையங்களில் கடை விரித்து காத்திருப்பவர்களின் வாழ்வில் வசந்தம் வீசும். பழமையான வித்தியாசமான பொருட்கள் கையில் சிக்கும்.

  தொடர்புக்கு : 9965405351

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad