விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி மணல் திருடர்கள் இருவர் உயிரிழந்தனர்.
புதுச்சூரங்குடி பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் மற்றும் திலகராஜ் மணல் திருடி விற்பனை செய்து வந்தனர். நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இருவரும் அழகர்நாயக்கன்பட்டி சோளக்காட்டுக்குள் காயங்களுடன் சடலாமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் ஆற்றில் மணல் திருடியபோது போலீசார் துரத்தியதால் தப்பி ஓடியுள்ளனர். அப்போது அருகிலிருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..
கருத்துகள் இல்லை