வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமானவரி அதிரடி சோதனை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்று இரவு 9.00 மணியளவில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர் .அங்குலம் அங்குலமாக பூதக்கண்ணாடி கொண்டு சோதனை நடத்தினர் . செய்தி அறிந்ததும் ஏராளமான தினகரன் ஆதரவாளர்கள் குவிந்தனர். சம்பவ இடத்திற்கு விவேக்,ஷிலா, பூங்குன்றன் வருமானவரி சோதனை முடியும் வரை வேதா இல்லத்தில் உள்ளே இருந்தனர் .
கைப்பற்றிய ஆவணங்கள்
சோதனை முடிவில் 2 லேப்டாப் , பென்ட்ரைவ் , கடிதங்கள் சிலவற்றை வருமான வரி சோதனை அதிகாரிகள்
எடுத்து சென்றனர் .
ஜெயா அறைக்கு மட்டும் சோதனைக்கு மறுப்பு
ஜெயாவின் அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் அறையைத் தொடவில்லை இதனால் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அறையைத் தவிர்த்து அனைத்து அறைகளையும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களின் பூதக்கண்ணாடி மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறையினரும் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். வேதா இல்லத்தில் முன் பலத்த போலீஸ் பாதுகாபு போடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை