• சற்று முன்

    மணல் குவாரிகளை மாத கால அவகாசத்தில் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 55 ஆயிரத்து 445 டன் மணலை இறக்குமதி செய்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மணலை கொண்டு சென்ற லாரிகளை கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மணல் வெளியே எடுத்துச் செல்லவும் தமிழக கனிமவளத்துறை தடைபோட்டது. இதை எதிர்த்து, எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மணலை இறக்குமதி செய்து விற்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, உரிய அனுமதியுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு சென்று விற்க அனுமதி வழங்கினார்.



    மேலும் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். எதிர்கால சந்ததியின் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளை காக்க மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளதாக கூறிய நீதிபதி, புதிதாக எந்த மணல் குவாரியும் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

    தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad