திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோவலில் அமல்படுத்தப்பட்டுள்ள பக்தர்களுக்கான நேர ஒதுக்கீட்டு திட்டத்திற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் நேரம் விரயமாகிறது.
இதனை தவிர்க்க திருப்பதி ோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையானை தரிசிக்க நேர ஒதுக்கீடு வழங்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக திருமலையில் 29 இடங்களில் 150 கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான நேரம் குறித்து பதிவு செய்யப்பட்ட டொக்கன் வழங்கப்படும்.டோக்கன் பெற்ற பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், வைகுண்டத்திற்குள் அனுமதிக்கபட்டு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், தரிசனம் செய்ய வருபவர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது. டிசம்பர் மாதம் 10ஆம் தேதி சோதனை முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் பின்னர், பக்தர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைக்களுக்குப் பிறகு நிரந்தரமாக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை