கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது .
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி ஜெயலலிதா மறைவையடுத்து கடந்த 11 மாதங்களாக காலியாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு வரலாறு காணாத வகையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு வலு சேர்ப்பது போல அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் போது ஆர்.கே.நகர் தேர்தலில் செய்யப்பட்ட பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது.
தேர்தல் தாமதம்
இனிடையே ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணி கட்சியின் சின்னம், பெயருக்கு உரிமை கொண்டாடியதால் சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஆர்.கே நகர் இடைத் தேர்தலை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்து வந்தது.

டெல்லியில் ராஜேஷ் லகானி
இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகோனி டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.
இன்று அறிவிப்பு?
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் எப்போது?
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே டிசம்பர் 14ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 18ல் நடைபெறுகிறது, இந்தத் தேர்தல்களை ஒட்டியே ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை