தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தை எதிர்த்தும், சொந்தநாட்டு மீனவர்கள் என்றும் பாராமல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணின் வளங்களை தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க் கூடாது, சாகடிக்கும் சாகர்மாலா திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையினர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் ஆரப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டது.
கருத்துகள் இல்லை