பல்லாவரம் நகராட்சி பள்ளியில் குழந்தைகள் தினவிழா
பல்லாவரம்: சென்னை அடுத்த ஜமின் பல்லாவரம் நகராட்சி பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் பரிசு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்க்கு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சுகன்யா தலைமை தாங்கினார். குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப்போடௌடிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. குறுவள மைய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த செயல்பாட்டிற்க்கான பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் கோவையில் நடைபெற்ற இண்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள் சித்தேஷ், ஹரிஹரன், மணிகண்டன் அகியோர்க்கு பள்ளி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாதாக மாணவர்களை அழைத்து சென்று வந்த தலைமையாசிரியர் ந.கார்த்திகேயன் ஆசிரியை கீதா பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலோச்சனா பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் சீனிவாசன் அகியோரை பள்ளிசார்பில் பாராட்டி கெளரவிக்கப்பட்டது.மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் முதல் பரிசை பெற்று மாவட்ட அளவில் போட்டியிட தேர்வாகியுள்ள மாணவன் கிஷோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை