நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்:
தாம்பரம் : தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தமிழக மீனவர்களை தாக்கிய இந்திய கடலோர காவல் படையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்க்கு காஞ்சி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் சிட்டலப்பாக்கம் பேரூர் தலைவர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் அருண்பாரதி வரவேற்றார்.ஆர்பாட்டத்தில் தமிழக மீனவர்களை தாக்கியதை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினர். ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் தமிரசன், சிவராமன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை