பல்லாவரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆர்பாட்டம்:
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியார்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
பல்லாவரம் பேரூந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்க்கு கதிரவன் தலைமை தாங்கினார். சரவணபவன் முன்னிலை வகித்தார்.விஸ்வகேது வரவேற்புரையாற்றானார் . தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவரும் ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளுருமான கு.தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தலைமை நிலையச்செயலாளர் தி.அருள்குமார் விளக்கவுரையாற்றினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டியும், இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட அரசு ஊழியர் ஆசிரியர் ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைய வேண்டும் மற்றும் 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகஅரசை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினார்கள் . இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.ஆர்பாட்டத்தின் முடிவில் ஜெயராணி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை