• சற்று முன்

    அமைச்சர் பெஞ்சமினுடன் OPS ஆதரவாளர் வாக்குவாதம்


    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் அரசு விழாவில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை புறக்கணிப்பதாக மேடையிலேயே அமைச்சர் பெஞ்சமினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகரால் சலசலப்பு ஏற்பட்டது.

    செங்கல்பட்டில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழச்சியில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக அதிமுக மத்திய மாவட்ட முன்னாள் செயலாளர் குமாரசாமி, ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்ற காரணத்தால் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், மேடையில் பேச வாய்ப்பும் அளிவிக்கவில்லை எனக் கூறி, அமைச்சர் பெஞ்சாமினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad