சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 6 நீதிபதிகள் நியமனம்!
சென்னை: சென்னை ஹைகோர்ட்டுக்கு கூடுதலாக 6 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நீதிபதிகளாக ரமாதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றி வருகிறார்கள்.
lபுதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைப்பார். சென்னை நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 54 நீதிபதிகள்தான் ஹைகோர்ட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கூடுதலாக 6 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஹைகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை