மணல் குவாரிகளை உடனே மூட வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும் நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மணல் மாஃபியாக்களின் கொள்ளையத் தவிர்க்கவும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மணல் இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நல்லகண்ணு அளித்த பேட்டியில், மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். இருப்பினும் 6 மாதம் என்பதும் அதிகம் தான். இதனைப் பயன்படுத்தி அதிக அளவில் மணல் அள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக இன்றில் இருந்தே மணல் அள்ளுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை