டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை..
சென்னை: செவிலியர்கள் போராட்டம் நடத்தும் டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தென் சென்னை காவல் இணை ஆணையர் அன்பு மறுத்துள்ளார். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு பிரிவு செவிலியர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
ஆனால் மற்றொரு பிரிவு செவிலியர்கள் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை தென் சென்னை இணை ஆணையர் அன்பு மறுத்துள்ளார். மேலும் டிஎம்எஸ் வளாகத்தில் எந்த 144 தடை ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தென் சென்னை இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை