RK நகரில் போட்டியிட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் விருப்ப மனு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்றும் இன்றும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்துக்கு ஆதரவாளர்களுடன் வந்த மதுசூதனன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
மதுசூதனன் தவிர முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தமிழ் மகன் உசேன், ஆதிராஜாராம் உள்ளிட்ட மேலும் 18 பேரும் விருப்ப மனுக்களை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை