• சற்று முன்

    பிரதமர் மோடிஐதரபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்


    ஹைதராபாத்தில், மெட்ரோ ரயிலின் முதல்கட்ட சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    மியாப்பூர் முதல் நாகோல் வரையிலான 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மாநிலத்தின் ஆளுநர் இஎஸ்எல். நரசிம்மன், மத்திய உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    பின்னர், அதே மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அவருடன், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் பயணித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad