• சற்று முன்

    கோலி இரட்டை சதம், இந்தியா 610 ரன்களுக்கு டிக்ளெர்


    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் புஜாரா, முரளி விஜய் ஆகியோர் நேற்று சதம் அடித்தனர். கேப்டன் கோலி சற்று அதிரடி காட்டி இன்று சதம் அடித்தார்.
    டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 19வது சதம் இதுவாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 51 சதம் அடித்துள்ள விராட் கோலி, இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச போட்டிகளில் 10 சதம் அடித்து, ஒரு ஆண்டில் அதிக சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து ஆடிய கோலி, 259 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
    அவர் 213 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் 160 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளெர் செய்வதாக விராட் கோலி அறிவித்தார்.
    டெஸ்ட் போட்டிகளில் கோலி இதுவரை 5 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இதனிடையே 150 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, ஷனாகா பந்துவீச்சில் 143 ரன்களில் அவுட்டானார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad