ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு 9 பார்வையாளர்கள் நியமனம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு 9 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பொதுப் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவுகள் மற்றும் கட்சியின் பிரச்சாரம் ஆகியவற்றை கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள், தேர்தல் முறைகேடுகளை தடுக்க காவல் பார்வையாளர்கள் என மொத்தம் 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர், தமிழகம் வந்து தேர்தல் பார்வையாளர்கள் 9 பேரும் பணிகளைத் தொடங்குவார்கள் என்றும், வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் தேவைக்கேற்ப கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை