• சற்று முன்

    ஆளைத் தூளாக்கும் கந்து வட்டியினை ஒழிப்போங்கோ !!! குடும்பத்தைக் காப்போங்கோ !!



    கந்து வட்டியா  ? கொள்ளும் விறட்டியா ?
    ஆளு செத்தா விறட்டி வைத்து எரிப்பாங்க ! ஆனால் .
    ஆசை வார்த்தைக் காட்டி மோக வலையில் மடி புடிச்சி இழுப்பங்கோ!
    இந்த கந்து வட்டிகாரங்கோ, உஷாரு!  உஷாரு!

    பகட்டுக்காக சுற்றி திரியும் அவசர தேவைக்கும்
    பணம் கொடுத்து உதவும் இவங்க கற்பக விருஷமாகத் தெரிவாங்கோ!
    வாங்கிய பணம் திரும்பிச் செலுத்த முடியாத போது
    கோரப்பற்கள் காட்டி கடிச்சி கொதரும் குட்டி பிசாசு இவங்கோ!



    கந்த்தையனாலும் கசக்கி கட்டு என்கிற பழமொழி மறந்தவங்கோ!
    கணவனிடம் சொல்லாமல் கண்ணுலபட்ட கந்து வட்டிகாரன் கிட்ட,
    காசை வாங்கி மாட்டிகிட்டு கழுத்தை நெருக்கிற  போது ; குடும்பத்தோடு
    தற்கொலை செய்து கொல்வங்கோ !



    சிந்தித்து பாருங்கோ ..........
    சீரான வாழ்வு வாழ வழி தேடுங்கோ ......
    ஆசையில் மதி  அலைய விடாதிங்கோ......
    ஆளைத் தூளாக்கும் கந்து வடியினை  ஒழிப்போங்கோ  !!!
    குடும்பத்தைக் காப்போங்கோ  !!  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad