• சற்று முன்

    பாம்பன் அருகே படகு கடலில் மூழ்கியதால் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

    பாம்பன் அருகே நாட்டுப்படகு கடலில் மூழ்கியதால் தத்தளித்த மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனர்.

    தெற்குவாடி பகுதியைச் சேர்ந்த 3 பேர் நாட்டுப் படகில் சென்று பாம்பன் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலோரக் காவல்படையினரின் ரோந்துக்கப்பல் அவர்களது படகுக்கு எதிரே வந்துள்ளது.

    இதனால் உயரமாக எழும்பிய அலைகள் தாக்கியதால், மீனவர்கள் இருந்த படகு தத்தளித்து கடலுக்குள் மூழ்கியது. உடனடியாக படகில் இருந்த மூன்று மீனவர்களையும் மீட்ட கடலோர காவல்படையினர், மண்டபத்தில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். கடலில் சிக்கிய மூன்று மீனவர்களுக்கும் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவர்களில் நாகேந்திரன் என்பவர் மட்டும் அதிகமாக கடல் தண்ணீரைக் குடித்தது தெரிய வந்ததால், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவை
    த்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad