• சற்று முன்

    வேதா இல்ல ரெயிடில் வெளி வந்த மர்மங்கள்

    போட்டுக்கொடுத்த பூங்குன்றன்

    சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த நள்ளிரவு அதிரடிசோதனையின் போது என்னென்ன பொருட்கள் கிடைத்தன, எந்தந்த அறைகளில் சோதனை நடந்தது உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 17ம் தேதி மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்குள் திடீரென வருமான வரித்துறையினர் நுழைந்தனர். இரவு 9 மணியளவில் இந்தத் தகவல்கள் மீடியாக்களில் கசிய போயஸ் கார்டன் ஏரியாவில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளரவு 1.45 மணி வரை நீடித்த இந்த சோதனையால் அந்தப் பகுதியில் தொண்டர்கள் குவிந்தனர். ஒரு புறம் வருமான வரி சோதனை நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் நள்ளிரவு போராட்டம், கைது என்று போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் நடந்த சோதனை குறித்து பலரும் சர்ச்சையான கேள்விகளை எழுப்பிய நிலையில், வருமான வரித்துறை அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. 


    ஜெ. அறையில் சோதனை விலக்கு  

    அதில் போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறை உள்பட 5 அறைகளில் சோதனை நடத்தினோம். ஜெயலலிதாவின் அறையை நாங்கள் சோதனையிடவில்லை

    15 வங்கிக் கணக்குகள் முடக்கம் 
    சசிகலா குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில் 80 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உறுதியான தகவல், ஆவணங்கள் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெற்றன. மேலும் அவர்கள் தொடர்புடைய 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன


    காவல்துறை போதிய பாதுகாப்பு 

    வருமான வரி சோதனைக்கு தமிழக காவல்துறையே போதுமான பாதுகாப்பு அளித்தால், நாங்கள் துணை ராணுவத்தை அழைக்கவில்லை. ஆவணங்கள் அடிப்படையில் தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறை விளக்கம் தந்துள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad