வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பான தகவலறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீபா, சங்கரி ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
மணிஷா மற்றும் ரேவதி உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலியான மாணவிகளின் சடலங்களை கண்டு பெற்றேர்கள் மற்றும் உறவினர்கள் அழுதது நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருந்தது.
ஆசிரியர்கள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை