• சற்று முன்

    படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் : ராய் லட்சுமி!


    மேனேஜர் இல்லாத நடிகைகள் தான் சபல புத்தி தயாரிப்பாளர்களிடம் சிக்குகிறார்கள் என நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

    ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பல நடிகைகள் அவருக்கு எதிராக புகார் அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ராய் லட்சுமி “ஹார்வி வெயின்ஸ்டீன் போல சபல புத்தி தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். நானும் அதுபோன்ற தயாரிப்பாளர்களை சந்தித்துள்ளேன். அவர்களை எப்படி கையாள்வது என எனக்கு தெரியும்.
    சமூக வலைத்தளம் வந்துவிட்டதால், வெயின்ஸ்டீன் போல தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். நல்ல மேனேஜர் இல்லாத வளர்ந்து வரும் நடிகைகள் இதுபோல சபல புத்தி கொண்ட தயாரிப்பாளர்களிடம் சிக்குகிறார்கள்” என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad