• சற்று முன்

    மோப்பம் பிடித்த அதிகாரிகள் தொடரும் ரெய்ட் ....



    சென்னை: வருமான வரித் துறையினரின் ரெய்டு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் ஆகியவற்றில் 3-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கினர்.

    மொத்தம் 190 இடங்களில் இந்த சோதனை தொடங்கிய நிலையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் முடிவடைந்துவிட்டது. 3-ஆவது நாளாக இன்று கொடநாடு எஸ்டேட்டில் ரெய்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது. அங்குள்ள கிரீன் டீ எஸ்டேட்டில் ரூ.16 கோடி கருப்பு பணம் வெள்ளையாக்கிய விவகாரத்தில் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அதேபோல் விவேக் ஜெயராமன் சிஇஓவாக உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் நமது எம்ஜிஆர் அலுவலகங்களிலும் 3-ஆவது நாளாக அதிகாரிகள் ஜல்லடை போட்டு முறைகேடுகளை தேடி வருகின்றனர். சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. மொத்தம் 135 இடங்களில் ரெய்டு தொடர்வதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad