சசிகலா வழக்கறிஞர் அறைக்கு ஐடி அதிகாரிகள் சீல் வைப்பு
நாமக்கல்: சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் அறையை வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் நீண்டகால வழக்கறிஞரான செந்தில் அலுவலகமும் ஐடி சோதனைக்கு தப்பவில்லை. ஆனால் செந்திலின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது.செந்திலிடம் சாவி கேட்டு அவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அலுவகம் பக்கமே வரவில்லையாம். இரு நாட்களாக பொறுத்து பார்த்த அதிகாரிகள் இன்று செந்தில் அறையில் சீல் வைத்துள்ளனர். அறையை திறக்கும் வரை வேறு யாரும் அறைக்குள் போவதை தடுக்க சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அறைக்குள் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை