விளாத்திகுளத்தில் தாலூகா அலுவலகம் முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் தாலுகா வைப்பாற்று கரையோரம்
அமைந்துள்ள கிராமம் சித்தவநாயக்கன்பட்டி. வைப்பாறு
பகுதியில் இருந்து
பல்வேறு கிராமங்களுக்கு
குடிநீர் வழக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில்
சித்தவநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள
வைப்பாற்றில் இருந்து மணல் எடுத்து விற்பனை
செய்வதற்காக சில நபர்கள் அரசின் உதவியுடன்
குவாரி அமைக்க
முயற்சி செய்ததாக
தகவல்கள் வெளியானது. அவ்வாறு
அமைக்கப்பட்டு மணல் எடுத்து விற்பனை செய்தால்
இப்பகுதியின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும்,
அந்த முயற்சியினை
கைவிட வலியுறுத்தி
விளாத்திகுளம் தாலூகா அலுவலகம் அருகே மார்க்சிய
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி விளாத்திகுளம்
தாலூகா செயலாளர்
புவிராஜ் தலைமையில்
நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டு
மணல் எடுக்கும்
முயற்சியை கைவிட
கோரி கண்டன
கோஷங்களை எழுப்பினர்.
இளசை - மு.லெனின்
கருத்துகள் இல்லை