• சற்று முன்

    மிதப்பது இன்று ... ஆலோசிப்பது என்று ?

    மழை வரும் முன்னே ............ ஆலோசனை வரும்  பின்னே ........

    சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பருவமழை பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். வெள்ளம் வரும் முன் அணை போடுங்கள் என்பார்கள். ஆனால் வெள்ளம் வந்த பின்னர்தான் தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனையே நடக்கிறது. 2015 ஆம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தை பார்த்த பின்னரும் இன்னமும் யாரும் பாடம் கற்கவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 2015 ஆம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாராலும் மறக்க முடியாது. அதே போல கடந்த ஆண்டு சென்னை வதம் செய்த வர்தா புயலை மறக்கவே முடியாது. அதை எல்லாம் கடந்து வந்தவர்கள்தான் சென்னைவாசிகள்.

    அதை எல்லாம் பாடமாக வைத்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்திய போது எல்லாமே என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர்களும் அதையே வழிமொழிந்தனர். இதோ மழை வந்து விட்டது. ஆனால் வெள்ளம் சூழ்ந்த மக்களை பாதுகாக்க எந்த முன்னெச்சரிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் எதிர்கட்சியினர்.

    முதல்வர் ஆலோசனை மழை வெள்ளம் பாதித்து 3 நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad