Header Ads

  • சற்று முன்

    குஜராத் தேர்தலில் பாஜக.வுக்கு தோல்வி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நம்பிக்கை

    ‘‘நாட்டில் வியாபாரம் எப்படி இருக்கிறது என்று சிறு வியாபாரிகளைக் கேட்டுப் பாருங்கள். சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்’’ என்று மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் துணைத் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.
    உலகில் எளிதாக தொழில் தொடங்க கூடிய சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் 130-வது இடத்தில் இருந்து முதல் முறையாக 100-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இது தங்கள் அரசின் சாதனை என்று பாஜக கூறி வருகிறது. இதை குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
    குஜராத்தின் ஜம்புசார் பகுதியில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
    தொழில் தொடங்குவதற்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறி உள்ளதாக மத்திய
    நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் பாஜக அரசும் கூறுகிறது. ஆனால், நாட்டில் சிறு வியாபாரிகளிடம் நிலைமையை ஜேட்லி கேட்டுப் பார்க்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகிய 2 பெரிய குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டது மத்திய அரசு.
    அதனால் சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் தங்களுடைய நண்பர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் 5 அல்லது 10 மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டும்தான் பலனடைந்துள்ளனர். அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்.
    ஆனால், அவர்கள்தான் நாட்டின் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சுகாதாரம், கல்வி, எரிசக்தி, தண்ணீர், உற்பத்தித் துறை என எதுவாக இருந்தாலும் நான் கூறிய 10 பேர்தான் முடிவு செய்கின்றனர். ஆனால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுக்கு ‘மின்சார அதிர்ச்சி’ (எலக்ட்ரிக் ஷாக்) காத்திருக்கிறது.
    மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. அடுத்தமுறை குஜராத்தில் மோடியின் நண்பர்களாக உள்ள தொழிலதிபர்களின் ஆட்சி இருக்காது. விவசாயிகள், ஏழைகள், வர்த்தகர்களின் அரசு இருக்கும். ‘மேக் இன் இந்தியா’ திட்டம் முழு தோல்வி அடைந்துவிட்டது. மக்கள்தொகையில் ஏறக்குறைய ஒன்றாக உள்ள சீனாவில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் பாஜக.வால் முடியவில்லை. 30 லட்சம் குஜராத்திகள் வேலையில்லாமல் உள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad