Header Ads

  • சற்று முன்

    குஜராத் தேர்தலை மையபடுத்தி வரி குறைப்பு




    இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 213 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தேர்தல் அரசியலுக்கானது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 213 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைத்துள்ளது ஜி.எஸ்.டி கவுன்சில். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வணிகர்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்தது மத்திய பா.ஜ.க. அரசு.

    தேர்தலை குறி வைத்து....

    தி.மு.க.வின் சார்பில், "ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதை 3 மாதம் தள்ளிவைத்து, முறையாக திட்டமிட்டு பிறகு செயல்படுத்துங்கள்" என்று நான் மத்திய நிதி மந்திரிக்கு விடுத்த வேண்டுகோளையும் கூட ஏற்கவில்லை. இங்குள்ள அ.தி.மு.க. அரசும் சட்டமன்றத்தில் தி.மு.க. சுட்டிக்காட்டிய பாதிப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் விரைந்து ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தது. அன்று மக்களின் பாதிப்புகளை கண்டுகொள்ள மறுத்த மத்திய பா.ஜ.க. அரசு, இன்று குஜராத் தேர்தல் நேரத்தில் இந்த வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

    இது ஒரு துவக்கம்

    ஜி.எஸ்.டி.யின் கீழ் 213 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது ஒரு துவக்கம் என்றாலும், இதுவே முடிவல்ல என்ற மனநிலையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெற வேண்டும். ஏனென்றால் ஜி.எஸ்.டி. வரி அதிகபட்சமாக 18 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் மட்டும் கூறவில்லை. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனே கூறியிருக்கிறார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad