இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணியில், மகேந்திரசிங் தோனி, ஷிகார் தவான், அஜிங்கியா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா சஹால், ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை