Header Ads

  • சற்று முன்

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு... சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்


    சென்னை: தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


    கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்குகள் உள்ளிட்டவை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. பல்வேறு முறை இந்த வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுக்கு அண்மையில் மாற்றப்பட்டது. அதன்படி இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெறுகிறது. தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தரப்பில் வைத்தியநாதனும் வாதிடுகின்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad